#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோவாக சிம்பு.. எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.!
தனது இளம் வயதிலேயே திரைத்துறை பயணத்தை தொடங்கி, லிட்டில் சூப்பர்ஸ்டார் என்று போற்றப்பட்ட நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றன.
அதனைத்தொடர்ந்து, பத்து தல படத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் நிலையில், விரைவில் படம் வெளியீட்டுக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கு பின்னர் சிம்பு ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் சிம்பு சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தெரியவருகிறது. ஏ.ஆர் முருகதாஸை பொறுத்தமட்டில் அவர் அசத்தலான படத்தை கொடுக்கும் முனைப்புடன் இருப்பதால், படம் ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.