விரைவில் இடியுடன் கூடிய மழை! பிரபல நடிகருக்கு செம ஹேப்பியாக நன்றி கூறிய சிம்பு! ஏன் தெரியுமா?



simbu-thank-actor-parthiban

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. ஆனால் அவருக்கு  சில காலங்களாகவே சொல்லிக்கொள்ளும்படி படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. மேலும் பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பெருமளவில் கைகொடுத்தது. பின்னர்  அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தற்போது சிம்பு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்புகள் கொரோனா  அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன்,  சிம்பு ஒரு சுயம்பு என அவரை பாராட்டி பேசியிருந்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சிம்பு அதனை வெளிப்படுத்தும் விதமாக நன்றி கூறி தனது உதவியாளர் மூலம் பூங்கொத்து ஒன்றை பார்த்திபனுக்கு  அனுப்பியிருந்தார். இந்நிலையில் அந்த பூங்கொத்தின் புகைப்படத்தை வெளியிட்டு  நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், சுயம்பு சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட, உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னும் ஏன் வொர்க் பண்ணலேன்னு. அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!! எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட ரசிகர்கள் விரைவில் பார்த்திபன் மற்றும் சிம்பு இணைந்து படத்தில் நடிக்கலாம் என பெருமளவில் எதிர்பார்க்கின்றனர்.