#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு! பொண்ணு யாருனு தெரியுமா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு பல ஆண்டு காலமாக மக்களிடையே பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் என இரு பிரிவில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் ஏராளம்.
அவ்வாறு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பலமுறை பாடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். மேலும் அவரை விஜய் டிவி, லோ பட்ஜெட் உதித் நாராயணன் என அடிக்கடி மாகாபா கிண்டல் செய்வார்.
அஜய் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியிலும் பாடல் பாடி வருகிறார். மேலும் அவர் வெள்ளித்திரையிலும் படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் அண்மையில் அஜய் கிருஷ்ணாவிற்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.