கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!
நிலம் தொடர்பான தகராறில் மேயர், நிலத்தை வாங்கியவரின் உறவினருக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி மாநகராட்சியில், சமீபத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அட்டபோது, அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் - திமுக கவுன்சிலர் சித்திக் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது, மேயராக பிரச்சனையை பேசி முடிக்க விடாமல் செயல்பட்ட முத்து துரை, இருவருக்கும் இடையேயான வாதத்தை காரசாரமாக்கும் வகையில் செயல்பட்டார்.
இதையும் படிங்க: பெண்ணின் காதை அறுத்து கம்மல் திருட்டு; ஒரே வீட்டில் இரண்டு முறை கொள்ளை.. திருட்டுச் சம்பவத்தால் குடும்பமே அதிர்ச்சி.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட நிலம்
மேலும், அதிமுக கவுன்சிலர் பிரகாஷை நோக்கி, "நீ கிழித்தது தெரியும், வெளிய போயா" என சீறிப்பாய்ந்தார். இந்நிலையில், முத்து துரை நபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, காரைக்குடி சூடாமணிபுரத்தில் இருக்கும் சொசைட்டி நிலத்தை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனி விஜயராகவன் என்பவர் ரூ.6000 பணம் கொடுத்து வாங்கி இருக்கிறார்.
மேயர் தரப்புக்கு எதிர்ப்பு தீர்ப்பு
இந்த நிலத்தை அன்றைய நகர்மன்ற தலைவரான மேயர் முத்து துரைக்கு, 17 ஆண்டுகள் கழித்து ரூ.74 ஆயிரம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளதாக போலி ஆவணம் தயாரித்து, நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், சீனிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிரட்டல் ஆடியோ
இந்நிலையில், பள்ளத்தூர் பகுதியில் வசித்து வரும் கணேஷ் குமார் என்பவருக்கு, ரூ.67 இலட்சத்திற்கு சீனி விஜயராகவன் மேற்கூறிய நிலத்தை விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து கணேஷ் குமாரின் உறவினர் கணேசனை முத்து துரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது, "அந்த இடத்திற்குள் யார் வந்தாலும் வெட்டுதான் விழும்" என பேசுகிறார். அதேபோல, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் ரூ.6000 கொடுத்து நிலம் வாங்கிய நிலையில், இன்று அவன் எப்படி விற்பனை செய்வான்? என பேசி இருக்கிறார். இந்த ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், மேயர் பெரும்பாலான நேரங்களில் எதிர்தரப்புகளை ஒருமையில் பேசுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
ஆடியோவை கேட்க
இடத்துல கால வச்சா வெட்டுதான் விழும்... மேயரின் மிரட்டலும்.. ஆபாச பேச்சும்.. மீண்டும் மீண்டுமா ஏழரை?#mayor #mayorissue #sivagangai #corporation #deaththreats #Tamilnadu #NewsTamil24x7 pic.twitter.com/EH6wMz3G6W
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 18, 2024
வீடியோ நன்றி: நியூஸ் தமிழ் 24X 7
அதிமுக கவுன்சிலரை ஒருமையில் பேசி வெளியே அனுப்பிய காணொளி:
கொசு உற்பத்தியை தடுக்க மாநகராட்சிசார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டஊதியத்தில் குளறுபடிகள் இருப்பதாக கூறி வெள்ளைஅறிக்கை கேட்ட அதிமுக கவுன்சிலர்களை ஒருமையில்பேசி வெளியேற சொன்ன காரைக்குடி மேயர் முத்துதுரை.@Vijayabaskarofl #ADMK_TRY pic.twitter.com/HoWsTs8Kbw
— Mani SVT (@ManiR63250944) October 14, 2024
இதையும் படிங்க: இன்று ஒரேநாளில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சோகம்.. பருவமழை தொடங்கும் முன்னே பரிதாபம்.!