திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அமரன் படத்துக்காக உடலை செதுக்கிய சிவகார்த்திகேயன்; படக்குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ.!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ் உட்பட பலர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் அமரன் (Amaran). நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், சிஎச் சாய் ஒளிப்பதிவில், ஆர். கலைவாணன் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது.
இப்படம் முகுந்த் வரதராஜனை அடிப்படையாக கொண்ட சிவ அரூர், ராகுல் சிங் எழுதிய நவீன இந்திய இராணுவத்தின் உண்மைகள் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு தயாரான படம் என கூறப்படுகிறது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படம் ரூ.150 கோடி பொருட்செலவில் தயாராகி வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனும் தனது உடலை மெருகேற்றி இருக்கிறார்.
படத்துக்காக உழைத்த சிவாவின் பிரத்தியேக வீடியோ
ஜம்மு காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த இப்படத்தின் படபபிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மெட்ராஸ் 'நாங்கதான்' பா. ரஞ்சித்தின் ஆதங்கம்; வெடிக்கும் இயக்குனர் பேரரசு..!
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் இப்படம், தீபாவளியில் தல அஜித்தின் விடாமுயற்சியுடன் போட்டிபோடுகிறது. இந்நிலையில், படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக உழைத்த வீடியோ ஒன்று படத்தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
#Amaran is Fit to Hit the screens this Diwali 🔥🔥🔥 100 days to go... #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
— Magizhmandram (@magizhmandram) July 23, 2024
A Film by@Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran pic.twitter.com/LoC2mosYUX