#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கெத்து காட்டி வரும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம்... இதுவரையிலும் இத்தனை கோடி வசூலா!!
முதலில் சின்னத்திரையில் தனது அசத்தலான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பின் வெள்ளித்திரையில் கால்பதித்து ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 14 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறது.
பொதுவாக நல்ல கதை உள்ள திரைப்படங்கள் வெளியான அதனை ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதை விரும்புவர். அந்த வகையில் மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரையிலும் மாவீரன் திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.