#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணம் முடிந்த சில நாட்களிலையே சினேகனுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 700-க்கும் மேற்பட்ட படங்களில் ஏறக்குறைய 2500 ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பின்னர் சினேகன் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை சென்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சினேகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். கன்னிகா பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர்களது திருமணத்தை நடிகர் கமல் முன்னின்று நடத்தி வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும்.
— Snekan S (@KavingarSnekan) August 2, 2021
அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ...🥰 pic.twitter.com/dX6UsiUoxm
இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாளே சினேகன் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ என தெரிவித்துள்ளார்.