#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சினேகன்! செம ரொமான்டிக்காக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
தமிழ்சினிமாவில் பல படங்களில், ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து யோகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களிலும் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன்மூலம் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை நடிகையான கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
என் சிரிப்பிற்கு
— Snekan S (@KavingarSnekan) August 11, 2021
பின்னால் இருப்பவள்....
I am so lucky papa❤ pic.twitter.com/zX5yuONiuJ
இந்த நிலையில் சினேகன் தற்போது தனது மனைவி கன்னிகா ரவியுடன் எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து, என் சிரிப்பிற்கு பின்னால் இருப்பவள்.... ஐ ஆம் சோ லக்கி பாப்பா... என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.