#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் மகள் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. வெளியான அசத்தல் தகவல்!
தனது மகள் சௌவுந்தர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இக்கத்தில் வெளியான லால் சலாம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைய வரலாற்று படத்தை இயக்க உள்ளாதாக கூறப்படுகிறது
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.