கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆனால்.," - சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி.!
தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே அரசியல் ரீதியான படுகொலைகள் என்பது அதிகரித்து இருக்கிறது. இதில் நேற்று இரண்டு தினங்களில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் 2 அரசியல் பிரமுகர்களின் கொலைகள் ஆகும்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு
அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், அரசு குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் அச்ச உணர்வை போக்கி, மக்களை காக்கும் அரசாக திமுக செயல்படுவதாக முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்படிப்போடு; குடை எடுத்துட்டு வெளியே போனீங்களா?.. 10 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை..!
சபாநாயகர் அப்பாவு பேட்டி
இதனிடையே, அடுத்தடுத்த கொலைகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர். இந்த விசயத்திற்கு அப்பாவு பதில் அளிக்கையில், "கொலைகள் என்பது நடக்கத்தான் செய்யும். தனிநபர்களுக்கு இடையே நடக்கும் விரோதத்தில் அவை நடக்கிறது.
இவ்வாறாக நடக்கும் கொலைகளுக்கு நடவடிக்கை எடுப்பதை மட்டுமே பார்க்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்திலேயே நீங்கள் கொலைகள் குறித்து கேள்வி எழுப்பலாம். அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: #Breaking: காவேரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மறந்தும் அந்த பக்கம் போயிடாதீங்க.!