#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தால் மட்டும்தான் இதெல்லாம் முடியும்! பிரபல இளம் நடிகையின் பதிவால் குஷியான ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார்.
அமிதாப் பச்சன், டாப்ஸி போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கே தல 59 படமாக உருவாகி வருகிறது.
மேலும் இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படத்துக்கு 'நேர்கொண்ட பார்வை' என தலைப்பு வைக்கபட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது .
இந்நிலையில் இதுகுறித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை, மருது, ஜீவா, வெள்ளக்கார துரை படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஃபர்ஸ்ட் லுக், அஜித்தால் மட்டுமே யோசிக்க முடியும், இந்த பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார்.
Releasing a FL with no any announcement, Just THALA things 😘❤ Hearty wishes to the entire team 👍👍#NERKONDAPAARVAI #AK59 #Thala59 @DirectorHvinoth @ZeeTamil @BoneyKapoor @SrideviBKapoor @ShraddhaSrinath @thisisysr pic.twitter.com/IQdqtvIEZt
— Sri Divya ❤ (@i_Sri_Divya) 5 March 2019