ராணாவுடன் திரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி!



srireddy-posted-photos-of-rana-and-trisha

சினிமாத்துறையில்  நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

இந்நிலையில் நீண்ட நாட்கள் இடைவெளிவிட்டு இருந்த நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் பாலியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த முறை அவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் இளைய மகன் அபிராம் ரகுபதி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

தற்பொழுது தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அபிராம் தனது தந்தையின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் தன்னை நடிக்க வைப்பதாக கூறி என்னுடன் தவறாக நடந்துள்ளார். அவர் என்னுடன் நீண்ட நாட்கள் நெருக்கமாக இருந்து என்னை்  ஏமாற்றி விட்டார் என கூறியுள்ளார். இந்த புகார் குறித்து இதுவரை சுரேஷ் பாபுவின் குடும்பத்தினர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

Sri reddy

இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர் அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் அதே பதிவில் நடிகர் ராணாவும் திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் ஏன் வெளியிட்டுள்ளார் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.