#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! செம தில்லுதான்!! சுனைனாவின் புகைப்படத்தைக் கண்டு வாயைபிளந்த ரசிகர்கள்!! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பெருமளவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. அதனைத் தொடர்ந்து அவர் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சுனைனா தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவர உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சுனைனா தற்போது ட்ரிப் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்திற்காக அவர் மிகவும் கொடூரமான நாயான பிட்புலுடன் காட்டிற்குள் வலம் வந்துள்ளார். அத்தகைய புகைப்படங்களை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு மிகவும் தைரியம் தான் என பாராட்டி வருகின்றனர்.
மேலும் படக்குழுவினர் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, மிகவும் பாதுகாப்பாக கவனித்து படத்தை எடுத்து வருவதாகவும் சுனைனா குறிப்பிட்டுள்ளார்.