கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
நடிகை சுனேனாவிற்கு என்ன ஆச்சு.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.?
தமிழ் சினிமாவின் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் சுனைனா. இவர் தமிழில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமாக அறியப்படுகிறார். முதல் திரைப்படமே மிகப்பெரும் வெற்றியடைந்து சுனைனாவின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
இப்படத்திற்கு பின்பு பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, வம்சம், சமர், கதிர்வேலன், வன்மம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் படங்கள் இவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை.
இதனால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கியது. இதன் பின்பு பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இது போன்ற நிலையில், தற்போது சுனைனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்று வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.