புதிய எபிசோடுகளுடன் மீண்டும் வருகிறது சன்டிவி தொடர்கள்! எப்போது தெரியுமா? செம உற்சாகத்தில் ரசிகர்கள்!



suntv-serial-new-ebisode-telecaste-from-july-23

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்குநாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய  ஊரடங்கால்  வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. 

அதனை தொடர்ந்து பல பிரபல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் நிறுத்தப்பட்டு,  பழைய எபிசோடுகள் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

அதனைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. ஆனாலும் வெளி மாநிலங்களில் வசிக்கும் நடிகர், நடிகைகளின் வருகையில் சிக்கல் மற்றும் உடல் நிலை காரணமாக ஏராளமான பிரபலங்களால் தொடர்களில் தொடர்ந்து நடக்க முடியவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

 சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் வரும் 27ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அனைத்து தொடர்களின் புதிய எபிசோடுகளும் பல மாற்றங்களுடன்,  திருப்பங்களுடன் ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்த தகவலை சன் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.