பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பல் மருத்துவராக பணி புரியும் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா... வைரலாகும் புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா.
இவர் பாடிய ' சின்ன சின்ன வண்ண குயில்' பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது. மேலும் பிரியங்கா பாடிய பாடல்கள் யூடியூபிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் அவர் பல ஜாம்பவான்களுடன் இணைந்து பாடியுள்ளார். ஏராளமான திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும் பிரியங்கா பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், இவர் பல் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஹாஸ்பிடலில் நோயாளி ஒருவருக்கு பல் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.