#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரொம்ப பிடிச்சிருக்கு.. நடிகர் சூர்யாவை கவர்ந்த ரசிகர்களின் வீடியோ! அப்படி அவங்க என்னதான் செய்துள்ளார்கள் பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனை முன்னிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 40வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அதனை தொடர்ந்து அன்று மாலை அவரது 39 வது படமான ஜெய்பீம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
Loved it !!! 👍🏽👍🏽👍🏽 https://t.co/qt3zqUtlCI
— Suriya Sivakumar (@Suriya_offl) July 25, 2021
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த சூர்யாவின் ரசிகர்கள் சிலர் அயன் படத்தின் பாடலுக்கு சூர்யாவை போலவே டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது பெருமளவில் வைரலான நிலையில் அதனை கண்ட நடிகர் சூர்யா எனக்கு இது பிடித்திருக்கிறது என குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.