#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என் மகனுக்கு திருமணம் செய்துவைக்க, இவரால் மட்டும்தான் முடியும்.! டி.ஆர் ராஜேந்திரன் உருக்கம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். சினிமாவில் ஒருபக்கம் புகழ் அதிகரித்தாலும், இவர் மீதான சர்ச்சைகளும் மறுபுறம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து உடல் எடையை குறைப்பதற்காக லண்டன் சென்றிருந்த சிம்பு தனது உடல் எடையை குறைத்து செம ஸ்மார்ட்டாக சமீபத்தில் நடைபெற்ற தனது தம்பியின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து சிம்புவிற்கு எப்பொழுது திருமணம் என கேள்விகள் எழ தொடங்கியது. மேலும் நடிகரும், சிம்புவின் தந்தையுமான டி. ஆரும் இது குறித்து மிகவும் கவலையடைய தொடங்கிவிட்டார்.இந்நிலையில் டி. ஆர் தனது குடும்பத்தோடு காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டி. ஆர், எனது மகன் வெளிநாட்டிலிருந்து போன் செய்து அத்திவரதரை தரிசனம் செய்தீர்களா என்று கேட்டான். என் மகனுக்கு பொருத்தமான மிகவும், பிடித்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க, அத்திவரதர் மனம் வைத்தால் மட்டுமே உண்டு என கூறி வருத்தப்பட்டுள்ளார்.