#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டவும் தயார்- பிரபல தமிழ் நடிகை; இதுக்கு மேல யாரும் இறங்கி வர முடியாது.!
அங்காடி தெரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அஞ்சலி. இதன் பயனாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் பார்ட் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர். இவர் தற்போது ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகை அஞ்சலி, சினிமா மற்றும் தன்னுடைய திருமண உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று வந்த செய்திகள் உண்மையில்லை. அப்படியே நான் திருமணம் செய்துகொண்டாலும் ஏன் சினிமாவை விட்டு விலகவேண்டும்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்’’ என்றார் அஞ்சலி.