#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எனக்கு எப்ப அந்த ஆசை வருதோ ,அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் ,வெளிப்படையாக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல இளம் நடிகை .!
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி .
அதனை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.திரைத்துறையில் நுழைவதற்கு முன் மென்பொறியாளராக பணிபுரிந்த டாப்ஸி தற்போது இந்தி ,தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவருக்கெனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் இவர் பேட்மிண்டன் வீரர் மேதிஸ் போ என்பவரை காதலித்து வருவதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது .
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய டாக்ஸி , எனக்கு இப்போதைக்கு திருமணம் எதுவும் இல்லை. மேலும் எப்பொழுது எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வருகிறதோ, அப்போது தான் நன் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பிடித்த ஒருவருடன் இருப்பதற்காகவெல்லாம் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.மேலும் திருமணம் செய்யாமலும் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் டாப்ஸி கூறியுள்ளார்