#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இரவு நேரங்களில் சில்மிஷம்.! பல பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்ஸி டிரைவர்!! ஷாக் சம்பவம்!!
சென்னை டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் 42 வயது மதிப்புமிக்க பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், எனது 13 வயது மகள் டியூசன் முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு தனியாக வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் எனது மகளை வழிமறித்து அவரை தவறான முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை கண்டுபிடித்துள்ளனர். அந்த வாலிபர் டிபி சத்திரம் புஜ்ஜி தெருவை சேர்ந்த 24 வயது நிறைந்த யோகேஸ்வரன். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.அவரது நடவடிக்கை சரியில்லாத நிலையில் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் அவர் பைக் டாக்ஸி மற்றும் ஆன்லைன் உணவு விநியோகம் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் வேலை முடித்துவிட்டு பைக் டாக்ஸியில் வரும் பெண்களிடம், மற்றும் நள்ளிரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்கள் ஆகியோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மூன்று மாதத்திலேயே 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்திமிரலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது., இந்நிலையில் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.