"தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்" பிரபல இயக்குநரான ஹரி கேட்டும் நடிக்க மறுத்த பிரபல நடிகை.!



Telungu actress rejected for acting tamil movie

கன்னட மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஶ்ரீ லீலா. இவர் 2019 ஆம் வருடம் வெளியாகிய 'கிஸ்' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். முதல் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

ஹரி

முதல் படத்திற்காக ஸ்ரீலீலா அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். இவர் தற்போது கன்னடத்தில் இருந்து தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து வருவதால்  ஸ்ரீ லீலா பயங்கர பிசியாக இருக்கிறார்.

தெலுங்கில் பிரபல நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் 'குண்டூர் காரம்' திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ராம் பொத்தினேனி, நிதின் போன்ற 6படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ஹரி

இதுபோன்ற நிலையில் ஸ்ரீ லீலாவை தமிழில் நடிக்க வைக்க இயக்குநர் ஹரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஸ்ரீ லீலா தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டாராம். மேலும் சில வருடங்களுக்கு அவர் தமிழில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று ஸ்ரீ லீலாவின் நெருங்கிய வட்டாரம் கூறியிருக்கிறது.