#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போனிகபூர்; இன்று வெளியாகிறது நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர்.!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
Wait is over #NerKondaPaarvaiTrailer will be releasing today 6pm via @zeemusiccompany #AjithKumar #HVinoth #BayViewProjects @ZeeStudios_ @SureshChandraa @ShraddhaSrinath @thisisysr @nirav_dop @dhilipaction @nerkondapaarvai @zeemusicsouth @ProRekha @DoneChannel1 @RangarajPandeyR pic.twitter.com/47B8wnWFMQ
— Boney Kapoor (@BoneyKapoor) June 12, 2019
மேலும், இப்படம் குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். போனி கபூரின் திடீர் அறிவிப்பு தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து அஜித் தல60 படத்தில் நடிக்கிறார். இப்படத்தையும் இயக்குனர் வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.