#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 63 படத்தின் கதை இதுதானாம்! இப்படி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து நடித்துவருகிறார் விஜய். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தளபதி 63 படம் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க, இதுதான் தளபதி 63 படத்தின் கதை என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் – கதிர் இருவரும் நண்பர்கள். கால்பந்து வீரர்களான இருவரும் பின்னாளில் கால்பந்து பயிற்சியாளராக மாறுகிறார்களாம். அப்போது கதிர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட அவருடைய மரணத்தின் காரணத்தை விஜய் கண்டுபிடிக்கிறார்.
வில்லன்களை பழிவாங்குவதோடு கதிர் பயிற்சி கொடுத்த கால்பந்து அணியை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் கதை என கூறப்படுகிறது.