#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்கும் இரு கிளாமர் குயின்ஸ்! யார் யாருனு பார்த்தீங்களா! பரவும் தகவல்!!
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக நடைபெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்பானது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அதாவது ரக்ஷன், ராஜலட்சுமி, கார்த்திக் குமார், அஜ்மல், ஸ்ரீநிதி ஆகியோர் பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இளசுகளை கிறங்கடித்து வரும் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.