வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நடிகை நஸ்ரியா சொன்னதை கேட்டு அந்த அரங்கமே சிரித்தது! ஏன் தெரியுமா?
சமூக வலைத்தளங்களின் மூலம் தான் பெரும்பாலான திருட்டுகள் நடக்கின்றது. அதிலும் குறிப்பாக வங்கி கணக்கு முதல் புதிதாக வரும் திரைப்படங்கள் வரை திருடுகின்றனர். இதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்று கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் நடத்த பட்டது.
அந்த கருத்தரங்கு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நடிகை நஸ்ரியா மற்றும் அவரது கணவர் பகத் பாசில் ஆகியோர் வந்திருந்தனர். பின்பு அவர்கள் இருவரும் இந்த கருத்தரங்கை ஆரம்பித்து வைப்பதற்காக மேடை ஏறினர். அப்போது நடிகை நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் அங்கு பேச தொடங்கினார்.
பகத் பாசில் பேசும்போது இந்த கருத்தரங்கை நான் தொடங்கி வைக்கிறேன் என்றும் இதற்கு பின்பு எனது மனைவி நஸ்ரியா இதை பற்றி உங்களுடன் பேசுவார் என கூறினார். பின்பு நடிகை நஸ்ரியா நன்கு வசமாக மாட்டிவிட்டார். இதையெல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை நஸ்ரியா இதை பற்றி எனது கணவர் பகத் பேசுவார் என கூறியுள்ளார்.
இதை கேட்டதும் அந்த கத்தரங்கில் இருந்த அனைவருமே சிரித்து விட்டனர். இந்த திருட்டை தற்போது திரைத்துறை மிகவும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வங்கி, கல்வி மற்றும் வர்த்தகம் என அனைத்திலுமே தற்போது ஒரு பாதுகாப்பற்ற சூழல் இருந்து வருகிறது இந்த பிரச்சனைக்கு இந்த கருத்தரங்கு மூலம் ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என கூறிவிட்டு தனது பேச்சை முடித்து கொண்டார் பகத் பாசில்.