தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை! காரணம் கூறி காதலன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்.!



the-reason-of-actress-jansi-suicide

தெலுங்கில் பவித்ரா பந்தம் என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் முன்னணி சீரியல்நடிகை ஜான்சி. இவர் சூர்யா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் ஜான்சியின்  தற்கொலைக்கு அவரது காதலன் சூர்யாதான் காரணம். திருமணத்துக்குப்பின் ஜான்சி நடிக்க கூடாது என சூர்யா  வலியுறுத்தியதால் மனமுடைந்துதான்  ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக ஜான்சியின் பெற்றோர்  போலீசில் புகார் அளித்தனர்.

suicide

இந்நிலையில் இதுகுறித்து போலீசார் சூர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சூர்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது,
 எனக்கு ஜான்சியை 10 மாதங்களாக தெரியும். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தோம். மேலும் ஜான்சி திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டார். அதற்கு நான்  என் தங்கை திருமணம் முடிந்ததும் நம் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் வீட்டில் பேசுவதாக கூறினேன்.

suicide

இந்நிலையில் என் தோழி என ஜான்சியை என் தாயாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன். இந்நிலையில் சமீபத்தில் என் தாயார் எனக்கு பெண் பார்த்து வருவதாக ஜான்சியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஜான்சி நான் போன் செய்த போது என்னுடைய போன் கால்களை எடுக்கவில்லை.மேலும் எனக்கு அதிக வேலை இருந்ததால் ஜான்சியின் அழைப்பையும் ஏற்க முடியவில்லை. இவ்வாறு அவர் எனக்கு பலமுறை முயற்சித்தும் நான் போனை எடுக்காததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அவரை நான் ஏமாற்றவில்லை என்று கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.