கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
குலுங்கிய கார்., தறிகெட்ட வேகம்.. தேவர் குருபூஜைக்கு காரில் அதகளம் செய்து பயணம்.! பகீர் வீடியோ.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன், முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை நிகழ்வையொட்டி, அரசியல்கட்சி தலைவர்கள் மற்றும் முத்துராமலிங்கத்தேவரின் பின்தொடர்பாளர்கள் பலரும், இன்று பசும்பொன் நோக்கி பயணித்து இருந்தனர்.
அரசியல் கட்சி சார்பில் பசும்பொன்னில் தேவருக்கு மரியாதையும் செலுத்தப்பட்டது. இதனிடையே, பசும்பொன் சென்று வரும் நபர்களின் பாதுகாப்பு உட்பட பிற காரணங்களுக்காக, தென்மாவட்டங்களில் மதுபான கடைகள் முன்னதாகவே மூடப்பட்டன. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கடவுளாக மாறிய தனியார் பேருந்து ஓட்டுநர்., நூலிழையில் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி.. பகீர் காட்சிகள்.!
வண்டலூர் Zoo Gate தெரியாம ஓப்பன் ஆகிருச்சி போல.. 🤡 pic.twitter.com/CwPMmL9zwk
— Sivakumar (@Siva_Chicago) October 30, 2024
குருபூஜை செல்லும் வழியில் சம்பவம்
இந்நிலையில், பசும்பொன் செல்லும் வழியில், குருபூஜை நிகழ்வுக்கு சென்றவர்கள் காரில் ஆபத்தான வகையில் சென்றதும், காரை குலுக்கி பயணித்ததும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் இன்றளவில் கார்களில் பேரணியாக பயணிப்பது இயல்பாகிவிட்ட நிலையில், அவர்களின் உயிருக்கே எமனாகும் விஷயங்களை இளம்கன்று கூட்டம் பயமறியாது செய்கிறது. இதனால் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் இழப்பு யார்பக்கம் என்பதை உணர்ந்தும் செயல்படுவது நல்லது.
இதையும் படிங்க: #Breaking: சென்னை உட்பட 23 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை; அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.!