வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இந்த சின்னத்திரை தனியார் தொலைக்காட்சி ஏமாற்றுவேலை பார்க்கிறது! பிரபல நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் சின்னத்திரை தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் இந்த பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அந்த பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதற்கு பின்பு அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக வெளியேற்ற பட்டனர். அந்த வகையில் கடந்தவாரம் இரண்டு பேர் வெளியேற்ற பட்டனர். அதில் நடிகர் பாலாஜியும், யாஷிகா வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவருக்கு ஒரு மிக பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகை யாசிக்கா தான் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து அனைத்து டாஸ்குகளையும் சரியாக செய்து வந்தார். அவர் தான் உண்மையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
ஆனால் நடிகை ஐஸ்வர்யாவை இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக்குவதற்காகவே கடந்த வாரம் யாஷிகாவை பிக்பாஸ் வெளியேற்றி விட்டார் என சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
மேலும் நடிகை ஸ்ரீபிரியா தனது மற்றொரு டிவிட்டர் பதிவில் இந்த “விஜய் தொலைக்காட்சி என்னை பல முறை ஏமாற்றி விட்டது என கூறியுள்ளார்.
முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உண்மையாக உழைத்தவருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுபோல் தற்போது இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து யாஷிகா வெளியேற்றமும் எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது” என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே ஒரு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.