"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#Breaking: "வந்த வேகத்தில் இருந்து புறப்பட்டார்" - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்; அதிமுக, காங்கிரஸ், தவாக கோஷம்.!
2025 புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைக்க அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தயாராக இருந்தன. புத்தாண்டின் தொடக்கத்திற்கு பின் அவை கூடுகிறது என்பதால், ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் கூட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆர்.என் ரவி புறப்பட்டார்
இந்நிலையில், சட்டப்பேரவையில் எந்த ஒரு உரையையும் வாசிக்காமல், ஆளுநர் புறப்பட்டு சென்றுள்ளார். அதிமுக & காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் ஆளுநரை சூழ்ந்துகொண்டு கோஷமிட்ட காரணத்தால், ஆளுநர் அவைக்குறிப்பு எதையும் வாசிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார். பலரும் Save Our Daughter என்ற பதாகையை கையில் ஏந்தியபடி சட்டப்பேரவை வளாகத்திற்குள் கோஷமிட்டு இருக்கின்றனர். இதனால் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அதிமுகவினர் கோஷம் எழுப்பிய நிலையில், தேசியகீதம் பாடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: காலையிலேயே பரபரப்பு... 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது..!
#WATCH | Tamil Nadu Governor RN Ravi leaves from the Secretariat as he boycotts Governor annual address
— ANI (@ANI) January 6, 2025
The winter session of the Tamil Nadu Assembly began today. pic.twitter.com/Nm7HCd2dK0
அண்ணா பல்கலை., விவகாரம்
முன்னதாக சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 15 க்கும் மேற்பட்ட நிலுவை வழக்கு கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் (வயது 37) என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்தனர். இதனிடையே, மாணவி எப்.ஐ.ஆர் தகவல் அறிக்கை வெளியான நிலையில், அதில் ஞானசேகரன் மாணவியை மிரட்டும்போது, நான் அழைக்கும்போதெல்லாம் போனில் பேசும் சாருடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த சார் யார்? என்ற விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலனை வீட்டிற்கு அழைத்ததால், சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்.!