#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#HBD பேபி அனைகா... குழந்தை நட்சத்திரத்திற்கு இன்று குவா.. குவா நாள்.. வயது எத்தனை தெரியுமா?..!
அனைகா சுரேந்திரன் என்ற பேபி அனைகா திரைத்துறையில் தவிர்க்க முடியாத குழந்தை நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2010 ஆம் வருடம் காத துடாருன்னு என்ற மலையாள திரைப்படம் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமான பேபி அனைகா, கடந்த 2015 ஆம் வரும் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்து தந்தை - மகள் பாசப்பொழிவை பெற்றார். பின்னர், விஸ்வாசம் படத்தில் கண்கலங்க வைத்துவிட்டார்.
இதனைத்தவிர்த்து, குயின் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். கடந்த 2013 ஆம் வருடம் வெளியான மலையாள திரைப்படமான 5 சுந்தரிகள் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர கேரள மாநில விருதையும் பெற்றார்.
தற்போது, சில படங்களில் அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வரும் நிலையில், தொடர்ந்து திரைத்துறையில் பயணிக்க விரும்புவதை போலவே சமூக வலைதளப்பக்கத்திலும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
நவ. 27 ஆம் தேதியான இன்று கடந்த 2004 ஆம் வருடம் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மஞ்சேரி நகரில் அனைகா பிறந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள். அவரின் வயது 17. இன்று அனைகாவின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.