#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்! பேட்ட, விஸ்வாசம், பிகில் எந்த இடம் தெரியுமா?
இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.
10 . காப்பான்:
இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா ஆகியோர் நடித்த காப்பான் படம் இந்த பட்டியலில் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
9 . கோமாளி:
அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான கோமாளி திரைப்படம் இந்த பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
8 . அசுரன்:
வடசென்னை படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படம் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 8 வது இடத்தை பிடித்துள்ளது.
7 . நம்ம வீட்டு பிள்ளை:
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த பட்டியலில் 7 வது இடத்தை பிடித்துள்ளது. சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
6 . கைதி:
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் இந்த பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது.
5 . நேர்கொண்ட பார்வை:
ஹெச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இந்த பட்டியலில் 5 வது இடத்தை பிடித்துள்ளது.
4 . காஞ்சனா 3:
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா-3 படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.
3 . விஸ்வாசம்:
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், தல அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
2 . பேட்ட:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
1 . பிகில்:
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.