மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் இது போன்ற திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் - டாப்ஸி ஓபன் டாக்!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவருக்கு பாலிவுட், கோலிவுட் என இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக ஹிந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தைரியமான சில கருத்துக்களை கூறி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஹிந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அனிமல் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "நான் அனிமல் போன்ற திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். நான் இன்னும் அந்தப் படத்தை பார்க்கவில்லை. ஆனால் பலர் அந்தப் படம் பற்றி பேசுகிறார்கள். ஹாலிவுட் படங்களை ஒப்பிட்டு அவை பிடிக்கும் போது ஏன் அனிமல் பிடிக்கவில்லை என கேட்கிறார்கள்.
அங்கே படம் பார்த்துவிட்டு யாரும் பெண்களை பின்தொடர்வதில்லை. ஆனால் நம் நாட்டில் அது நடக்கிறது. அதனால் அவர்களோடு நம் படங்களை ஒப்பிட முடியாது. அந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.