கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காவேரி ஆற்றில் குளிக்கச்சென்ற சிறுவன் சடலமாக வீடுதிரும்பிய சோகம்.. ஆனந்த குளியலில் நடந்த துயரம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம், மெயின் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் மகன் கோகுல் (15). சிறுவன் கோகுல் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் தில்லை நாயகம் படித்துறை, காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இவர்கள் அனைவரும் உற்சாகமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: நீச்சல் குளத்தில் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்; 3 வயது சிறுவன் பரிதாப பலி.!
சிறுவன் சடலமாக மீட்பு
அச்சமயம், திடீரென கோகுல் நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சலும் தெரியாத காரணத்தால், நீந்தி கரையேற முடியவில்லை. சிறார்களின் கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சிறுவனின் உடலை சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின்னர் மீட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி: நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உறக்கத்திலேயே மரணம்? நூடுல்ஸ் பிரியர்களே, பெற்றோரே உஷார்.!