கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சுமை தூக்கும் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்; பணியின்போதே நடந்த துயரத்தால் மரணம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள தில்லை நகர், செங்குலத்தான் கோவில் தெருவில் வசித்து வருபவர் பேச்சிமுத்து (வயது 49). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தில்லை நகர் 80 அடி சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவன கிட்டங்கியில், சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
பரிதாப பலி
இதனிடையே, கடந்த சனிக்கிழமை பகல் நேரத்தில், இவர் துணி துவைக்கும் யந்திரத்தை சுமந்து சென்றுள்ளார். அச்சமயம் இயந்திரத்துடன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் படுகாயமும் அடைந்தார்.
இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சென்னை இளைஞர்கள் ஐவர் பலி; ரூ.2 இலட்சம் இழப்பீடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!
இதனால் உடனடியாக மீட்கப்பட்ட அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மருத்துவ சிகிச்சையிலிருந்து வந்த பேச்சிமுத்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கச் சென்றபோது சோகம்; 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி.!