கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கடைசியா ஒரேயொரு தடவை... கெஞ்சிய கள்ளக்காதலன்.. மறுப்பு தெரிவித்த பெண் பேருந்து நிலையத்தில் படுகொலை.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரின் மனைவி சுமதி (வயது 42). தம்பதிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த சுமதி, தினமும் பணிக்கு சென்றுவரும்போது மாரிமுத்து (வயது 30) எனபவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் பின்னாளில் இவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் அவ்வப்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ஒரேயொரு முறை என அழைத்த கள்ளக்காதலன்
இந்த விஷயம் சுமதியின் உறவினர் ஒருவருக்கு தெரியவரவே, அவர் சுமதிக்கு அறிவுரை வழங்கி கள்ளக்காதலை கைவிட கூறியுள்ளார். இதனால் மாரிமுத்துவிடம் சுமதி பேசுவதை தவிர்த்து இருக்கிறார். இதனிடையே, இறுதியாக நாம் ஒரேயொரு முறை உல்லாசமாக இருக்கலாம் என மாரிமுத்து அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் காமத்தால் பறிபோன உயிர்.. விடுதி அறையில் விண்ணுலகம் அனுப்பிய காதலி.!
பேருந்து நிறுத்தத்தில் பதறவைக்கும் சம்பவம்
இதற்கு சுமதி மறுப்பு தெரிவித்த காரணத்தால், இன்று காலை சிறுகாம்பூர் பேருந்து நிறுத்தத்தில் சுமதியை மாரிமுத்து ஓடஓட விரட்டி குத்திக்கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்; கள்ளகாதலால் சோகம்.!