கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!
ரசிகர் மன்றத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்து, இன்று கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் நபரின் மரணத்திற்கு விஜய், புஸ்சி ஆகியோர் நேற்றே இரங்கல் தெரிவிக்காதது வருத்தத்தை அளிக்கிறது என மறைந்த தவெக நிர்வாகிகளின் உறவினர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொள்கை அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கொள்கை, கோட்பாடு அறிவிப்பை வெளியிட்டார்.
திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் பலி
மேலும், எதிரிகளாக பிளவுவாத அரசியல், ஊழல் போன்றவற்றை எதிர்த்து, திமுக, பாஜகவை மறைமுகமாக நகையாடி இருந்தார். இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள காரில் வந்த திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் கலை ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களின் மறைவு திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "நேற்று வந்தவர்களை பற்றி கவலை வேண்டாம்" - தவெக குறித்து முக ஸ்டாலின் சூசகம்?..!
இன்று ஆறுதல் தெரிவிப்பு
மாநாட்டுக்கு புறப்பட்டு தொண்டர்கள் வரும் வழியில் ஆங்காங்கே உயிரிழந்தது செய்திகளாக வெளியான நிலையில், விஜய் நேற்று எந்த விதமான வருத்தமும், இரங்கலும் தெரிவிக்கவில்லை. இன்று மதியத்திற்கு மேல் விஜயின் உத்தரவின் பேரில் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சிக்கு விரைந்து கலை & சீனிவாசனின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
உறவினர்கள் குமுறல்
இதனிடையே, கட்சியின் தலைமையில் இருந்து நேற்று முதலாக இரங்கல் தெரிவிக்காததற்கு, சீனிவாசன் & கலையின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்களின் உறவினர்கள் அளித்துள்ள பேட்டியில், "மாநாடு நடக்கும் போது விபத்தில் சிக்கி முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்துள்ளார்கள். அதற்கு இரங்கல் தெரிவித்து இருக்கலாமே?.
உடனடியாக தொடர்பு கொள்ளாதது ஏன்?
இன்று வரை கட்சியின் தலைமையில் இருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எங்களுக்கு நிதி உதவி ஏதும் வேண்டும் என கேட்டோமா?. இரங்கல் அறிவிப்பு தானே கேட்கிறோம். இந்த செயல் கண்டிக்கத்தக்கது. நிர்வாகிகள் பலியாகினர் என்ற தகவல் விஜய் காதுக்கு ஏன் செல்லவில்லை? சென்றும் அவர் இரங்கல் தெரிவிக்க மறுத்தாரா?. விஜய் அனுதாபமாவது தெரிவிக்க வேண்டாமா?. எங்களின் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று வரை எங்களின் நிலை குறித்து அவர்கள் கேட்டறியவில்லை.
பல ஆண்டுகள் ரசிகர் மன்றத்திற்காக உழைத்து, தொண்டராக பணியாற்றி, இன்று உழைப்பால் உயர்ந்துள்ளவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காதது எப்படிப்பட்டது" என வருத்தம் தெரிவித்தனர்.
"ஒரு உண்மையான விசுவாசிகள் இறந்துருக்காங்க ஒரு இரங்கல் கூட தெரிவிக்கல".. மாநாட்டிற்கு சென்ற போது த.வெ.க நிர்வாகிகளுக்கு நடந்த சோகம் - விஜய் மீது கோபப்பட்டு பேசிய உறவினர்கள்#Trichy | #TVK | #ActorVijay | #Family | #Accident | #PolimerNews pic.twitter.com/Mdbw6M7E2W
— Polimer News (@polimernews) October 28, 2024
வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: திமுகவை விளாசி அனல்பறந்த பேச்சு; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்..! விஜய்-க்கு எதிராக குரல்.!