#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடைக்குள் தேவதை.. வாணிபோஜன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..
நடிகை வாணிபோஜன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன்.தெய்வமகள் சீரியலில் சத்தியா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். வாணிபோஜனை பார்ப்பதற்காகவே தெய்வமகள் சீரியல் பார்த்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்தவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவினார்.
அவரது முதல் படமான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணதை தொடர ஒரு மைல் கல்லாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் வாணி போஜன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார்.
தற்போது ஒய்ட் குடையில் தனது அழகிய புன்னைகையுடன் வெள்ளை நிற உடை அணிந்து குயூட் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையவாசிகளிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தற்போது வைரலாகிவருகிறது.