#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட வாய்ப்பிற்க்காக அந்த விசயத்திற்கு சம்மதிச்சிருக்கீங்களா..? நடிகை வாணி போஜனிடன் தொகுப்பாளர் கேட்ட கேள்வி.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் நடிகை வாணி போஜன். சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு சென்றுள்ள இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில், பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு செல்லும் பழக்கம் உங்களுக்கு உண்டா என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு கடுப்பாகி பாதியில் இருந்து எழுந்து சென்றுள்ளார் நடிகை வாணிபோஜன்.
சினிமா வாழ்க்கையில் ஏதாவது அட்ஜஸ்ட்மெண்ட் சம்மந்தமான அனுபவங்களை பற்றி கூறுங்கள் என தொகுப்பாளர் கேட்க, இந்த பிரச்சனை தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் உள்ளது. எனக்கும் இதுபோன்ற அனுபவம் நடந்திருக்கிறது. ஆனால், நேரடியாக யாரும் என்னிடம் கேட்டது இல்லை.
எனது மேலாளரிடம் கேட்டுள்ளார்கள், அவரே அதெல்லாம் முடியாது என பேசி முடித்துவிட்டார். என்னிடம் வந்து நேரடியாகவோ இல்லை, ஃபோன் கால் மூலமோ யாரும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை என கூறினார்.
அப்போதும் விடாத தொகுப்பாளர், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு செல்லும்போதோ, மென்மேலும் வளரும் போதோ ஒருசில விஷயத்திற்காக ஒத்துக்கொண்டு உள்ளீர்களா? என்று மீண்டும், மீண்டும் கேள்வி கொண்டே இருந்தார்.
இதனால் கடுப்பான வாணி போஜன் இனி உங்கள் கேள்விக்கு பதில் கூற முடியாது, இந்த நேர்காணலை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.