#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது இதுவா..! ஒத்த வீடியோவால் வெடித்த சர்ச்சை! கழுவி ஊத்தியவர்களுக்கு செம கூலாக பதிலளித்த வனிதா!!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் முன்னணி நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் வனிதா சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். ஆனாலும் எதற்கும் தயங்காமல் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கக் கூடியவர். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இவர் யூடியூப் சேனல் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவர் சமையல் வீடியோக்கள் உட்பட ஏராளமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் வனிதா அண்மையில் தன் யூடியூப் பக்கத்தில்,
மலபார் பீப் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலான நிலையில், சிலர் ஆதரவாகவும் பலர் திட்டியும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வனிதா அவர்களுக்குத் தன் பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களே உங்களுக்கு என்னாச்சு! எனது நட்பு வட்டாரத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இது வெறும் உணவு தான். நான் ஏழு வயதிலிருந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். சிறுவயதில் இருந்தே பல நாட்டு உணவுகளை சாப்பிட்டுள்ளேன்.
நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்.
அதை பிறர் மீது திணிக்கக் கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் எனது மகள் கூறியது போல், உங்களுக்கு பிடித்த மாமிசத்தையோ, காய்கறியயோ வைத்து இதே பிரியாணியை சமைத்து சந்தோஷமாக சாப்பிடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.