#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மதம் மாறிவிட்டாரா நடிகை வனிதா! ஒற்றை பதிவால் குழம்பிய ரசிகர்கள்! அவரோட பதிலை பார்த்தீர்களா!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்ததாக முன்னேறி வருகிறார். மேலும் வனிதாவிற்கு தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா அவ்வப்போது ஏதேனும் சுவாரஸ்யமான விஷயங்களை இணையத்தில் பகிர்வார். இந்நிலையில் வனிதாவிற்காக ஹரிதா என்பவர் ஓவியம் ஒன்று வரைந்து அன்பு கடிதம் எழுதியிருந்தார். அதை மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டரில் பகிர்ந்த வனிதா அதில்
இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டிருந்தார்.
A sweet girl Haritha made this for me in the shooting spot..my day is made.. inshallah pic.twitter.com/xL52VPfFN6
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 15, 2021
இதனைக்கண்ட நெட்டிசன் ஒருவர் என்ன வனிதாக்கா இஸ்லாமிய மதத்திற்கு மாறி விட்டீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் நான் ஒரேயொரு உச்ச சக்தியை மட்டும்தான் நம்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஒரே ஒரு வார்த்தையை போட்டதற்காக இப்படியெல்லாம் கேட்பது நியாயம் இல்லை என தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
I believe in one supreme power... https://t.co/DpQlXb8oTo
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) April 16, 2021