அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நாயின் மீது பரிதாபப்பட்டதால் நடந்த சோகம்; 3 பேருக்கு காயம்.. பதைபதைப்பு காணொளி உள்ளே.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது வாகனத்தில் சவாரி இல்லாமல் சென்றுகொண்டு இருந்தார்.
குறுக்கே புகுந்த நாய்
சாலையில் இவர் பயணித்தபோது, திடீரென குறுக்கே ஒரு நாய் ஒன்று புகுந்துள்ளது. இதனால் பதறிப்போன ஆட்டோ ஓட்டுநர், நாயின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை லேசாக திருப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: தலைகுப்பற கவிழ்ந்த டிராக்டர்; கணவர், பச்சிளம் குழந்தை முன் தாய் துள்ளத்துடிக்க பலி.!
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் புகுந்தது. இதனால் அங்கு நின்றுகொண்டு இருந்த இரண்டு பேர் லேசான காயம் அடைந்தனர். ஆட்டோ ஓட்டுனரும் விபத்தில் காயமடைந்தார்.
3 பேர் காயம், காவல்துறை விசாரணை
அவரின் மீது ஆட்டோ இருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோ ஓட்டுனரை மீட்டனர். மேலும், அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு, மூவரும் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விஷயம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆட்டோ விபத்தில் சிக்கிய காணொளி வெளியாகியுள்ளது.
#Watch | வேலூர்: குடியாத்தம் பகுதியில் வேகமாக வந்த ஆட்டோவின் குறுக்கே நாய் வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க திடீரென ஆட்டோவை திருப்பிய ஓட்டுநர்; ஆட்டோ நிலைத்தடுமாறி அருகில் இருந்தவர்கள் மீது மோதியதில் 3 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது#SunNews | #Vellore | #RoadAccident pic.twitter.com/JxmcC7m5Hm
— Sun News (@sunnewstamil) May 29, 2024
இதையும் படிங்க: தனியார் அருவி பயன்பாட்டால் சோகம்; ஜீப் ஓட்டுநர் பலி., தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?.!