நயன்தாராவின் பிடிவாதத்தால்.. AK62 படவாய்ப்பை இழந்த விக்கி.! அதிர்ச்சி தகவல்.!



vignesh-shivan-angry-with-nayanthara

விக்னேஷ் சிவன், சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு இவர் இயக்கிய விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது.

Ajith
இந்த படத்தில் இருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி இருந்தனர். இவர்களது காதல் கடந்த வருடம் திருமணமாக மாறியது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இத்தகைய நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணைந்து Ak 62 திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். இவரது கதை அஜித்திற்கும், லைக்கா புரோடக்ஷன் கம்பெனிக்கும் பிடிக்கவில்லை என்று விக்னேஷ் சிவனை ஏகே 62 வில் இருந்து நீக்கிவிட்டு மகிழ்திருமேனியை வைத்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.


Ajith
மேலும் விக்னேஷ் சிவனை AK 62 வில் இருந்து நீக்கியதற்கு நயன்தாரா தான் காரணம் என்று கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். Ak 62-வில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் த்ரீசாவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர். இதற்கு மறுத்த விக்னேஷ் சிவன் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்ததால் இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்ற தகவல் கசிந்துள்ளது.