#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட வாய்ப்பு இல்லாததால் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நடிகர் போன்ற பல்வேறு திறமைகளை கொண்டிருக்கிறார். முதன் முதலில் இயக்குனராக சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தில் பணியாற்றினார்.
இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தை இயக்கினார். மேலும் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனிற்க்கும் நடிகை நயன்தாராவிற்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றது. மேலும் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு பின்பு அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
ஆனால் விக்னேஷ் சிவனின் கதை லைக்கா மற்றும் அஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி இயக்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் ஜீ தொலைக்காட்சியில் பிரபலங்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.