#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் தனது 65வது படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் அடுத்தப்படத்தில் நடிக்கிறார்.இப்படம் விஜயின் 64 படமாக உருவாகிறது.அதனை தொடர்ந்து விஜய்யின் 65வது படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார் என்றும் அதில் விஜய் முதலமைச்சராக நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
அநேகமாக அது முதல்வன் 2வாகவும் இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.விஜய் மற்றும் சங்கர் கூட்டணி இணைவுமா?விஜய் முதல்வர் கதாபாத்திரத்தில் தோன்றுவாரா? என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.