என்னதான் நடந்தது? சிகிச்சைக்காக விஜய் ஆண்டனியை ஜெர்மனி அழைத்துச்செல்லும் குடும்பத்தினர்..



vijay-antony-will-have-to-go-through-plastic-surgery-fo

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர்  மற்றும் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில்  பயணிப்பவர்  விஜய் ஆண்டனி. இயக்குனர் சசி  இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து  பிச்சைக்காரன் 2 படத்தை  இவரே இயக்கி நடித்து வந்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பு  மலேசியாவில் நடந்து வந்தது . மலேசியாவில் உள்ள கங்காவி தீவில் வைத்து நடைபெற்ற படப்பிடிப்பின் போது  ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.


vijay antony
கடலில் வைத்து படமாக்கப்பட்ட இந்த காட்சிகளில் விஜய் ஆண்டனி வேகமாக படகு ஓட்டி வருவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் ஓட்டி வந்த படகு எதிர்பாராத விதமாக இன்னொரு படகுடன் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்தார் விஜய் ஆண்டனி. முதலுதவி அளிக்கப்பட்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மலேசிய தலைநகரில் உள்ள கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது ஆபத்தான கட்டங்களை தாண்டி நன்றாக குணமாகி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவரது முகத்தில் அதிகமான அளவு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி  செய்ய வேண்டி வரலாம் எனவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


vijay antony
இதுகுறித்து தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர் விஜய்  ஆண்டனி ஓரளவு குணமடைந்த பிறகு முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்களுக்காக  ஜெர்மனி நாட்டிற்கு சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தின் போது அவருக்கு நீச்சல் தெரியாததால்  இன்னும் ஆபத்தான நிலைமையில் இது முடிந்ததாக படக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.