#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! திடீரென கொதித்தெழுந்த நடிகர் விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா?
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிகில் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், வீடு, பைனான்சியர் அன்புச்செழியன் வீடு நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விஜய் அவரது வீட்டிற்கு அழைத்து வரபட்டு தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் அன்புசெழியனுக்கு தொடர்பான இடங்களிலிருந்து 77 கோடி பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை வருவமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் விஜய் மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அதனாலேயே அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது.
மேலும் ஜேப்பியார் கல்விக்குடும்பத்தை சேர்ந்த ரெஜினா என்பவரும் தமிழகம் முழுவதும் பெரும்பாலோனோர் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, ரமேஷ் கண்ணா, ஆர்யா, ஆர்த்தி போன்றோர் வட பழனியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு மதம் மாறியுள்ளனர். மேலும் பல திரைத்துறையினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பணம் தரப்படுவதாகவும், அமித் ஷா மற்றும் மோடி வகுத்த பல தடைகளைத் தாண்டி இந்தப் பணம் பிகில் படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் தனது சமூகவலைத்தள பதிவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பதிவை கண்ட விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், போய் வேற வேலை இருந்தா பாருங்கடா’ என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020