#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. வேற லெவலில் கலக்கும் விஜய் டிவி சரத்! அவரது மனைவி கொடுத்துள்ள அசத்தலான பரிசை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் அதில் பங்கேற்றவர்களும் தற்போது பெரும் பிரபலங்களாக, மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர்களாக உள்ளனர். அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு.
இதில் கலந்துகொண்டு தனது அசத்தலான காமெடியால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் சரத். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது சேட்டைகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து சரத் தற்போது அவரது மனைவியுடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
சரத் கிருத்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அழகிய ஜோடியாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சரத் வீட்டிற்கு புது வரவாக கார் வந்துள்ளது. அதாவது சரத்தின் மனைவி கிருத்திகா தனது கணவர் சரத்திற்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனை மிகவும் உற்சாகத்துடன் சரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.