மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Siragadikka Aasai Promo: ரோகினியின் மகன் என்பதை அறிந்துகொண்ட கிரிஷ்; இறுதியில் ட்விஸ்ட்... பரபரப்பாகும் சிறகடிக்க ஆசை நெடுந்தொடர்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில், தற்போது வரை 375 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இத்தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் கோமதி பிரியா, வெற்றி வசந்த், அனிலாஸ்ரீ குமார், பிரீத்தா ரெட்டி, சல்மா அருண், பாக்கியலட்சுமி, சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
கடந்த வாரம் வரையில் மீனா - முத்து தம்பதியை எப்படியாவது வீட்டில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என நினைத்த விஜயா, அவரது முயற்சியில் தோல்வியுற்று தற்போது அதுவே அவரது பிற மகன்களுக்கும் பிரச்சனையாக வந்துவிட, அவர் கோபத்தில் மீனாவை வசை பாடி வருகிறார்.
இதையும் படிங்க: தொடர் தொந்தரவால் பாக்யாவிடம் கோரிக்கை வைத்த கோபி.. அடுத்த வாரம் நடக்கபோவது என்ன?.. ப்ரோமோ வைரல்.!
வீட்டிற்கு வந்த கிருஷ்
இதனிடையே ரோகினியின் மகன் கிருஷுக்கு விபத்தில் காயம் பட்டுவிட, அவரது பாட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த போது முத்து - மீனா தம்பதிகளை கண்டு விடுகிறார். பின் பாட்டி-பேரன் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து வந்தவர்கள், அவர்கள் 2 நாட்கள் இருக்க ஏற்பாடு செய்கின்றனர்.
தற்போது அடுத்த வாரத்திற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரோகிணி தான் தனது உண்மையான தாயார் என்ற செய்தியை கிருஷ் அறிந்து கொள்கிறார். இதனால் அவர் நீதான் எனது அம்மாவா? என்று கேட்க அவரும் ஒப்புக்கொள்கிறார். இந்த காட்சிகள் அடுத்தடுத்த பரபரப்பை தொடரில் உண்டாக்கி இருக்கிறது.
உண்மையை ஒப்புக்கொண்ட ரோகினி
இந்த தகவலை யார் கேட்கப் போகிறார்கள்? இதற்கு பின் தொடரில் நடக்க போகும் மாற்றம் என்ன? என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஏற்கனவே மனோஜ் சிறுவயதில் செய்த தவறுக்கான பழியை முத்து ஏற்றுக்கொண்டு தனது தாயிடமிருந்து எந்தவிதமான பாசத்தையும் தற்போது வரை பெறாத நிலையில், அந்த உண்மையை அறிந்த முத்து மற்றும் சுந்தர்ராஜன் தற்போது வரை அதன் ரகசியத்தை காத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது ரோகிணியின் ரகசியத்தை இவர்கள் இருவரும் காப்பாற்றுவார்களா? அல்லது இவர்களுக்கு உண்மை தெரிந்து விடுமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதனால் அடுத்த வாரம் மிகுந்த பரபரப்புடன் காட்சிகள் நகரும் என கூர்பாடுகிறது.
இதையும் படிங்க: நடுரோட்டில் மைனா நந்தினியின் கணவருடன் இருவர் கைகலப்பு.. இறுதியில் வெளியான உண்மை.!!