வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஜாதியை கேட்பாங்க, இனி நான் செல்லும் இடமெல்லாம் பாடுவேன் - சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா.!
சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலமாக பல திறமையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை எட்டு சீசன்களை கடந்துள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது, ஒன்பதாவது சீசனில் அடியெடுத்து வைத்தது.
இந்த சீசனில் அருணா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் உட்பட 5 பேர் இறுதி போட்டிக்கு தகுதியான நிலையில், முதலில் இருந்து சிறப்பாக பாடி வந்த மயிலாடுதுறை சார்ந்த அருணா சூப்பர் சிங்கர் 9-வது சீசன் டைட்டிலை வென்றார்.
அவருக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. இதற்கிடையில் அருணா வீடியோ ஒன்றில் பேசுகையில், "நான் கோவில்களில் பாடச் சென்ற சமயத்தில், பாடி முடித்த பின்னர் சிலர் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் என்ன ஜாதி? என்பது தான்.
அதனை வெளியே கூறினால் நம்மை அடுத்து பாட விட மாட்டார்கள் என்ற பயம் எனக்கு இருக்கும். அதனால் வெளியே சொல்லாமல் நான் தவித்து பயந்தேன். இனி உலகின் எந்த மூலையில் சென்றும் நான் பாடுவேன். எனக்கு பயம் கிடையாது" என தெரிவித்தார்.